“மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” -சூப்பர் ஸ்டார் கேட்கிறார் !!!

தலைமுறை தாண்டி தனக்கென்று தனியிடத்தை ரசிகர்களின் இதயங்களில் கொண்டவர், இன்றும் சூப்பர்ஸ்டார் ஆக தமிழ்சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். அரசியலிலும் கூட ஒரு ரவுண்ட் வரவிருக்கிறார் என்பது மேலதிக தகவல்.

rajini-santhanam

சூப்பர்ஸ்டார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “லிங்கா”. கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ராதாரவி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை வழங்குகிறார்.

இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரோடு “எந்திரன்” படத்திற்கு பிறகு மீண்டும் சந்தானம் கொமெடியில் கொடிகட்ட போகிறாராம்.

“எந்திரன்” திரைப்படத்தில் ரஜினியுடனான கொமெடிக்காட்சிகள் சந்தானத்துக்கு இல்லை. சந்தானம், கருணாசுடன் தான் கொமெடி செய்துகொண்டிருப்பார்.ஆனால் “லிங்கா” படத்தில் சந்தானம், இளையதலைமுறை நடிகர்களை கலாய்த்து நடிப்பது போன்றே, ரஜனியையும் கொமடியில் கலாய்த்து நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை,சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம் பெறும் வசனம் போன்று, ரஜினி, சந்தானத்திடம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” என்று கூறும் வசனம் இதில் இடம்பெற்றுள்ளதாம்.ரஜினி இளமை தோற்றத்தில் இந்தப்படத்தில் நடிப்பதோடு, சந்தானத்தை கொமடியில் குலுங்கவைத்திருப்பதாகவும் ஒரு செய்தி.

அத்தோடு ரஜினியின் அறிமுகப்பாடல் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்படுகின்றமை இதுவே முதல்முறை என்ற விசயமும் வெளியே கசிந்துள்ளது. ஹொங்கொங் நகரத்தில் தான் இந்தப்பாடல் படமாக்கப்படவுள்ளதாம்.

இதேவேளை லிங்கா படத்தின் கதையும் கசிந்தள்ளது

50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர் ரஜினி பொறியியலாளராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. ”எனக்கு இந்துவும் வேணாம், கிறிஸ்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க ” என்று ரஜினி அழைக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார்.

ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத அந்த விபரீதம் நடக்கிறது. ஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்றுவிடுகிறார். ரஜினியுடன் சோனாக்‌ஷி சின்ஹாவும், சோனாக்‌ஷி தந்தை ராதாரவியும் சென்றுவிடுகிறார்கள்.

அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் திருந்துகிறார்.

பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டுக் மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை .

இக்கதையை எப்படி K.S ரவிக்குமார் படமாக்கியிருக்கிறார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கலாம்.