மக்களை நம்பவைத்து கழுத்தறுத்த கூட்டத்தை இனங்கண்டு ஒதுக்கவும் – அங்கஜன்

யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி அமைப்பாளரும் , வடமாகாண சபைக்கான வேட்பாளருமான அங்கஜன் இரமநாதன் ஞாயிற்றுக்கிழமை நயீனா தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும், அருகிலிருந்த பெளத்த விகாரைக்கும் சென்று மதகுருமார்களின் ஆசியை பெற்றதை தொடர்ந்து , நயீனாதீவு பொது மக்களுடனான சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

நயினாதீவு வாழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் , அன்றாட இடர்பாடுகளையும் கேட்டறிந்த அங்கஜன், அது தொடர்பில் ஆவன செய்யகூடியவற்றை ஆராய்வதாகவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்களால் கேட்கப்பட்ட வட மாகாணசபை தேர்தல் தொடர்பான சில சந்தேங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமளித்து உரையாற்றுகையில் , இதுவரை மக்களை நம்பவைத்து கழுத்தறுத்த கூட்டதை இனங்கண்டு ஒதுக்கி மக்களுக்காக உண்மையாக உழைப்போருக்கான மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

67649_10153061503570567_903945478_n

 

945792_10153061516905567_1155647970_n

1017287_10153061479540567_1828130674_n

1098486_10153061502330567_2054052281_n