மக்களுக்கு நீதித்துறையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது – முதலமைச்சர்

vicky0vickneswaranஇலங்கையில் இடம்பெறும் வழக்குகளில் அரசுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும் மற்றும் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாலும் நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலி.வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்.

எனினும் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக நேற்று புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

மேலும் இதேவேளை நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் 18 ஆவது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல் வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்றவாறு நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்

Related Posts