மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்

மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும். அதேவேளை தொகுதிகளில் வேலைத்திட்டங்களை அடையாளம் காண்பதிலும், அதற்கான மதிப்பீடுகளைச் செய்வதிலும் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் பேணப்பட வேண்டும்’ என்று பாரம்பறிய கைதொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

party meeting  3

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தொகுதிகளுக்கு பங்கீடுசெய்வது தொடர்பாக கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழில் ஞாயிற்றுக்கிழமை(17) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘பதினைந்து பிரதேச சபை செயலாளர் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகக் குழுவினர், அடுத்ததாக பிரதேச பொதுக்குழுவை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

தொகுதி நிர்வாகக் குழுவும், தொகுதி பொதுக் குழுவும் பொதுச் சபையும் செயற்திறன் மிக்கதாகவும் உறுதிமிக்கதாகவும் கட்டியெழுப்பட்டு செற்படும்போது தற்போதைய நமது பயணம் மேலும் முன்னோக்கிச் செல்லும்.

தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகக் குழுவினர் நியமனம், எதிர்காலத்தில் தொகுதி குழுக்களிலின் தெரிவு முறையிலையே இடம்பெறும்.

எனவே நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மக்களுக்கான திட்டங்களை பாரபட்சமற்றவகையிலும் நேர்மையாகவும் அரசியல் கடந்த மனிதாபிமானத்துடனும் செயற்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதி, மற்றும் விசேட ஏற்பாடுகளுக்குள்ளாக அரசிடமிருந்து பெறப்படும் நிதிகள் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை வகுப்பதோடு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட வேண்டும்’ என்றார்.