மக்களால் மாத்திரமே பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் உத்தரவு தான் பிரதமராவதற்கு கிடைத்த மக்கள் உத்தரவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் இங்கு மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.