வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்தில் இன்று அலுவலக செயற்பாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று திறக்கவிருந்த நிலையில் அதிகாலை குறிப்பிட்ட புதிய கட்டிடத்திற்கு; இனம் தெரியாத நபர்களினால் கழிவு ஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டது. எனினும் திட்டமிட்ட படி குறிக்கப்பட்ட நேரத்தில் ஊழியாகள் ,தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இனைந்து கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இதற்காக சுன்னாகம் சிவன்கோவிலில் இருந்து படம் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி பால்காய்சியதுடன் அலுவலககக் கடமைகளையும் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இதற்கு முன்னர் சுன்னாகம் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இயங்கி வந்த இவ் அலுவலகத்தில் இருந்த தளபாடங்கள் மற்றும் அவணங்கள் நேற்று பகல் கொண்டு வரப்பட்டு இன்று முதல் முழுமையான இக் கட்டடத்தில் கடமைகள் ஆரம்பமாகின.
இது தொடர்பில் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களுடைய தேவைக்காக கட்டப்பட்ட இவ் புதிய கட்டிடம் சில பொறுப்பற்றவர்களினால் கழிவு ஓயில் ஊற்றி சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு செய்யப்பட்ட பாரிய துரோகமாகும்.
அதனடிப்படையில் எமது மக்களுடைய செயல்பாடுகள் எம்மால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை.எனவே மக்களுடைய சேவையை அடிப்படையாக் கொண்டு இந்த புதிய கட்டிடத்தில் பிரதேச சபையின் தலைமையகத்தை இயக்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.
அத்துடன் விசமிகளால் ஊற்றப்பட்ட கழிவு ஓயிலை நாம் அழித்து விடப் போவதில்லை. இந்தக் கட்டடத்திற்குள்ளேயே இருந்து எமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.