பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.