மகேஸ்வரனின் இரண்டு சகோதரர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டி!

maheswaran_thiyagarajahமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரர் தியாகராசா மகேஸ்வரனின் இரண்டு சகோதரர்களும் வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவிருக்கின்றனர்.

அமரர் மகேஸ்வரனின் சகோதர்களில் ஒருவரான தியாகராசா துவாரகேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாவட்டத்திலும், மற்றைய சகோதரரான தியாகராசா விக்னேஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.