மகிந்தவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை வேறிடத்துக்கு மாற்றக் கோருகிறது தந்தை செல்வா அறங்காவலர் குழு!

தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள, வீதி புனரமைப்பு தொடர்பான மகிந்த ராஜபக்சவின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை வேறிடத்துக்கு மாற்றுமாறு தந்தை செல்வா அறங்காவல் குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

memo-stone-jaffna-selva-thanthai-1

கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறை வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது இந்த நினைவுக் கல் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பெயர்களை பொறிக்கப்பட்ட வீதி புனரமைப்பு தொடர்பான நினைவுக் கல் தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளதாக தந்தை செல்வா அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜெபநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த நினைவு கல்தந்தை செல்வா சதுக்கத்துக்கு இடையூறாக இருப்பதன் காரணமாக அதனை பொருத்தமான மாற்று இடத்தில் வைக்குமாறு தந்தை செல்வா அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜெபநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts