பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார்.
மேலும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவையும் ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் உடனிருந்தனர்.