போலி நாணயத்தாளுடன் வங்கி ஊழியர்கள் மூவர் கைது

arrest_1500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்.நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் குறித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று எரிபொருள் நிரப்பிவிட்டு 500 ரூபா பணத்தைக் கொடுத்துள்ளனர். எனினும் குறித்த நாணயத்தாள் வித்தியாசமாக இருப்பதாக எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள் வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

ஆயினும் அதனை ஏற்றுக்கொள்ளாத வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் இறங்கவே கைகலப்பு ஏற்படுமளவுக்கு நிலைமை சென்றது. உடனே இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வங்கி ஊழியர்கள் மூவரையும் கைது செய்ததோடு போலி நாணயத்தாளையும் மீட்டுச் சென்றனர். அது தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, முன்னரும் இவ்வாறு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிலர் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி எரிபொருள்களை நிரப்பிச் சென்றுள்ளனர் எனவும் குறித்த நாணயத் தாள்களை வங்கியில் வைப்பிலிடும்போது அவை போலியானவை என நிராகரிக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது. – See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641552179417113723#sthash.gXm6acSp.dpuf