போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு

Suntharam arumai_CIயாழில் போரினால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இவர்களுக்கான நஷ்ட ஈடு நாளையதினம் ஜனாதிபதியினால் அலரிமாளிகையில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் 1200 பேருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் யாழ். மாட்டத்தில் மட்டும் 600 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.