போதையில் குழப்பம் விளைவித்தவருக்கு விநோத தண்டனை

இளவாலை பகுதியில் மதுபோதையில் வீதியால் சென்று வருபவர்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒருவரை, நீதிமன்ற வளாகத்தில் சமூதாய வேலையுடன் கூடிய சமூதாய சீர்திருத்த பணியை 150 மணித்தியாலங்கள் மேற்கொள்ளுமாறு மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று (12) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு, இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், 20 நாட்களுக்குள் 150 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட்ட நீதவான் உத்தரவிட்டார்.