போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

Give-Blood-Give-Lifeயாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த ஒருவாரகாலமாக குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.நந்தகுமாரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் நிலவும் குருதித் தடடுப்பாட்டை நிவர்த்திசெய்யும் பொருட்டு கொழும்பு மத்திய இரத்த வங்கியிலிருந்து குருதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

மேலும் நடமாடும் குருதி சேகரிப்பு நிலையங்களின் ஊடாக உரியமுறையில் குருதி சேகரிக்கப்படாமையே குருதி தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

b-, o- ஆகிய குருதிகளுக்கே அதிகளவான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.