போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு!!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபை மற்றும் கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட குழுக்கள் என 6 குழு நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு உள்ளதா என கண்டறியும் நோக்குடன் தேடலை மேற்கொண்டனர்.

அதற்கமைய பூங்கண்டுகள் வைக்கப்பட்டுள்ள சாடிகள் , தண்ணீர் தேங்கும் இடங்கள் என வைத்தியசாலை சூழலில் 9 இடங்களில் டெங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விரைவில் அழிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வளாகத்தை நாளாந்தம் சுத்தப்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

டெங்கை ஒழிப்போம் என்று வைத்தியசாலையினர் மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வரும் நிலையில் வைத்தியசாலையில் இருந்து டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை கேள்விக்குரிய விடயம் தான்.

ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்ற கதை போலத்தான் இருக்கின்றது.