போகோ ஹராம் குழுவினரால் நைஜீரியாவில் மேலும் 25 பெண்கள் கடத்தல்

நைஜீரிய நாட்டின் வடகிழக்கு மாகாணத்திலிருந்து 25 பெண்கள் போகோ ஹராம் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

boko-haram

போகோ ஹராம் குழுவினரால் கடந்த ஏப்ரல் மாதம் 200 பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதுடன் கட்டாய மதமாற்றத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஏனைய நாடுகள் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மேலும் 25 பெண்களை அக்குழுவினர் நேற்று முன்தினம் கடத்திச் சென்றுள்ளனர்.