வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாறம்பைக்குளம் குட்டிநகர் என்ற பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த விட்டில் வசித்து வந்த செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் அவருக்கு அறிமுகமான பியசேனகே எதிரிசிங்க என்ற இருவருமே தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரவு முழுவதும் சடலங்களுடன் வீட்டில் தங்கியிருந்த புஸ்பராணியின் சுமார் 5 வயது மதிக்கத்தக்க பேத்தி கூறுகையில், அம்மம்மாவுடன் குறித்த ஆண் சண்டையிட்டு தடியால் தாக்கியதாகவும், அதன் பிறகு இவ்வாறு கயிற்றில் தொங்கவிட்டதன் பின்னர் தானும் தொங்கியிருந்தார் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.