பொலிஸ் காவலில் தாக்கப்பட்டனராம்! இரு சிறுவர்கள் யாழ். ஆஸ்பத்திரியில்!!

Sl_police_flagபொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கருதப்படும் இரு சிறுவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் கூறப்படுபவை வருமாறு:

யாழ்ப்பாணம் நயினாதீவுப் பகுதியில் வைத்து காணாமல்போன பொருள் ஒன்றைத் திருடியவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு யாழ். சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட இரு சிறுவர்கள் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு சிறுவர்களும் பொலிஸ் காவலில் இருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனவும் அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே இவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விரு சிறுவர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 11ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகின்றமை தொடர்பாக விசாரிப்பதற்காக நேற்று வைத்தியசாலைக்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸ் நேரில் சென்றிருந்தார் என்றும் கூறப்பட்டது.