பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

attack-attackபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். மாம்பழம் சந்தியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்குமான பழக்கம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மகளை போன்று கதைத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இவ்வாறு வீட்டிற்கு அழைத்த போது குறித்த பொலிஸார் தான் பழகும் பெண் அழைத்ததாக எண்ணி பெண்ணின் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கிருந்த குறித்த பெண்ணின் சகோதரன் மற்றும் தாயார் இணைந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பியோடி யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.