பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

police-conயாழ். மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகள், பொறுப்புக்கள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இந்தச் செயலமர்வில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர், வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதற்கான நிகழ்வில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலகரட்ண, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நந்தன, யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி, யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிஹேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor