பொலிஸார் விதித்த ‘புதிய தண்டம்’

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டபணச்சீட்டு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்திலுள்ள மேடையொன்றில் அரங்கேற்கவிருக்கின்ற நாடகத்துக்கான அனுமதிச்சீட்டுகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

அந்த அனுமதிச்சீட்டுக்கள், பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியினாலேயே வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் போக்குவரத்து பிரிவைச்சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு தண்டச்சீட்டுக்கு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான 1000 ரூபாய் பெறுமதியான அனுமதிச்சீட்டே விற்கப்பட்டுள்ளது.