பொலிஸாரிடம் பிடிபட்ட ஆட்டுத்திருடர்கள்

jail-arrest-crimeநவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11:30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது சந்தேகத்துக்கிடமான முறையில் கன்ரர் வாகனத்தில் ஆடுகள் ஏற்றப்பட்டு இருந்துள்ளன. இதையடுத்து கன்ர வாகன ஓட்டுனரையும் அவரோடு வந்த உதவியாளரையும் பொலிஸார் பிடித்து விசாரணைகளை மேற்கொண்டபோதே ஆடுகள் களவாகப் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட உண்மை தெரியவந்துள்ளது.இதையடுத்து அச்சுவேலி பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் ஆடுகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த ஆடு திருடர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியை சேந்தவர்கள் எனவும், ஆடுகளை ஏற்ற கொண்டுவந்த கன்ரர் வாகன இலக்கத்தகடும் மாற்றப்பட்டு போலி இலக்கத்தகடு பூட்டப்பட்டே ஆடுகளை பிடிக்க வந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor