பொருட்களின் விலை குறைப்பு செய்யப்படாத கடைகள் சோதனை

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் 45 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஓரளவான விலைக்குறைப்புக்கள் நடைபெற்று வருகின்றன. முறைப்பாடு கிடைகப்பெறும் கடைகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். இந்த மாதம் 10 க்கும் குறைவான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த மாதம் காலாவதியான பொருட்கள் விற்பனை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 வழக்குகள் அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு, வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 39 ஆயித்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts