பொன்னாலையில் அழுகிய நிலையில் சடலம்!

வலிகாமம் மேற்கு, பொன்னாலைச் சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இனங்காணப்பட்டுள்ளது.

பொன்னாலைச் சந்தியிலிருந்து சம்பில்துறை செல்லும் பிரதான வீதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் கடற்கரை ஓரமாக மேற்படி சடலம் பொதுமக்களால் அடையாளம் கணப்பட்டு, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபர் உயிரழந்து சில வாரங்களாக இருக்கலாமென்று தெரிவித்துள்ளனர். மேற்படி சடலம் இன்றைய தினம் மல்லாகம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் மீட்கப்படுமென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.