வடமராட்சிப் பிரதேசத்தில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. சிவில் பாதுகாப்புக் குழுக்களும் ஊடகங்களும் பொலிஸாருக்கு வழங்கிய ஒத்துழைப்பே குற்றங்கள் குறைவடையக் காரணமாகும். இவ்வாறு காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவிருத்திருக்கிறார்.
பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களுடனான சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
வடமராட்சியில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு, கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் குறைந்து வருகின்றன. பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவினால் குற்றச் செயல்களை முற்றாக ஒழித்துக்கட்டிவிடலாம். அவ்வாறான நிலைமை வெகுவிரைவில் வந்துவிடும் என்று கருகிறேன். கரவெட்டி ராஜகிராமம் குற்றங்கள் கூடிய கிராமமாக இருக்கின்றது. அக்கிராம மக்களை குற்றச் செயல்களில் ஈடுபடாவண்ணும் அறிவுறுத்தல் வழங்கி அவர்களையும் எம்முடன் கைகோர்த்து நிற்க முயற்சி செய்வோம் – என்றார்.