Ad Widget

பொதுநலவாய மாநாட்டு சனாதிபதி சந்திப்புக்கள்

நைஜீரியாவின் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தார்
2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது இலங்கை வந்திருக்கும் நைஜீரியாவின் உப ஜனாதிபதி மொஹம்மத் நமாதி சம்போ நேற்று காலை கொழும்பிலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

ohammed Namadi Sambo

ஆபிரிக்க நாடுகளுடனான இருதரப்புக்கூட்டுறவை விரிவாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும் இலங்கை முன்னுரிமையளித்துள்ளது என ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த இருதரப்பு சந்திப்பின்போது நைஜீரிய உபஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனதனின் வாழ்த்துக்களை ஜனாதிபதியிடம் தெரிவித்த உப ஜனாதிபதி சம்போ 2013 பொதுநலவாய அரச தரலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நைஜீரியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான சிறந்த உறவுகளைப் பாராட்டுவதாக திரு. சம்போ தெரிவித்தார்;. இவ்விருநாடுகளுக்கிடையே முறையான இராஜதந்திர உறவுகள் 1970 இல் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கைக்கும் நைஜீரியாவுக்குமிடையிலான உறவுகளில் புதிய முன்னேற்றத்தை தாம் வரவேற்கிறோம் என்றும் உப ஜனாதிபதி சம்போ தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவரகள் மாநாடு முடிந்ததன் பின்னரும் இலங்கையில் தங்கியிருந்து இலங்கையைச் சுற்றிப்பார்க்குமாறு நைஜீரிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்புவிடுத்தார்.

துவாலு அரசின் ஆளுநர் சனாதிபதியை சந்தித்தார்.

துவாலுவின் ஆளுநர் இக்கொபா இட்டலெலி (Iakoba Italeli) அவர்கள் நேற்று காலை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் சனாதிபதி அவர்களை சந்தித்தார்.

Tuvalu Lakoba

“இலங்கைக்கு வருகைதந்து அனைத்தையும் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என ஆளுநர் தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு சிறப்புற நிறைவேற நல்வாழ்த்துக்கூறிய இட்டலெலி அவர்கள் “இந்த முக்கியமான விழாவுக்கு உபசரணை அளிப்பதில் நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை வருகின்றபோது வழியில் இந்நாட்டு மக்கள் மாநாட்டுக்காக காட்டுகின்ற ஆர்வத்தையும் அக்கறையையும் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார்.

இலங்கை முகம் கொடுத்திருந்த முப்பது ஆண்டுகால பயங்கரவாத மோதல்கள் தொடர்பாக ஆளுநருக்கு அறிவ+ட்டிய ராஜபக்~ அவர்கள், பயங்கரவாதிகள் அழித்த அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

தற்பொழுது வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற மீளக் குடியமர்த்தல், புனர்வாழ்வு, நிலக் கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் பற்றியும் அண்மையில் முடிவடைந்த வடமாகாண சபை தேர்தல் பற்றியும் ராஜபக்~ அவர்கள் விபரித்தார்.

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 7மூக்கும் 8மூக்கும் இடையிலான பெறுமதியைக் கொண்டிருக்கும்போது மோதல் முடிவடைந்த நாள் முதல் வடக்கின் பொருளாதார வளர்ச்சி வேகம் 20மூமாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையுடனான இருதரப்பு தொடர்புகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஆளுநர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி சரத் அமுணுகம, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம ஆகியோரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இலங்கை நவுரு ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நவுரு ஜனாதிபதி பாரோன் வக்காவும் நேற்று காலை சந்தித்து இரண்டு நாடுகளுக்குகிடையிலான இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

President of Nauru

இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நவுரு ஜனாதிபதி வக்கா இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் இதில் கலந்துகொள்வதற்கு எதுவும் தமதுக்குத் தடையாக இருக்கப்போவதில்லையென்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் இதுவெனத் தெரிவித்த ஜனாதிபதி வக்கா தான் சொந்த நாட்டில் இருப்பதுபோன்று உணர்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கை 30 வருடகால போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசம் எனத்தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டு முதல் இங்கு குண்டுவெடிப்புகள் அல்லது கொலைகள் கிடையாது எனத்தெரிவித்தார். வாழ்வதற்கான உரிமை மக்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இச்சந்திப்பின் முடிவில் நவுரு குடியரசுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி வக்கா அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில் பிரதி நிதி திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் திரு லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் பங்குபற்றினர்.

Related Posts