பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் – ஐ.தே.க வேட்பாளர்கள் சந்திப்பு

DSC_0134யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். ஞானம்ஸ் ஹோட்டேலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுநலவாய நாடுகளின் ஜனநாயக விடயங்களுக்கான தலைமை ஆலோசகர் மார்சின் ஜெசி மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான செயலாளர் அன்னா ஜெயற்றி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் நடைபெறவுள்ள தேர்தலில் கட்சிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம் மற்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்தனர்.