பொட்டு அம்மானைக் கைதுசெய்யவில்லை – மறுக்கும் இலங்கை

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

poddu-amman

அவரது உடல் கிடைக்கப் பெறவில்லை எனினும், இறுதிப் போரின் போது, பொட்டு அம்மான் கொல்லப்பட்டமை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பதற்காக பரப்பப்பட்ட கதை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவம், பல மாதங்களாக பொட்டு அம்மானை கண்காணித்து வந்ததாகவும், தனது மனைவி- பிள்ளையைப் பார்க்க பொட்டு அம்மான் கனடா செல்ல முயன்றபோது அவரைக் கைது செய்துள்ளதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வௌியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.