பேஸ்புக்கில் ஆசிரியர்களின் முகங்களை மாற்றி பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை!

facebook-crimeசமூக வலைத்தளம் பேஸ்புக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முகங்களை மாற்றி அவர்களின் படங்களை பதிவேற்றம் செய்த மாணவனுக்கு எதிராக விசாரணை நடைபெற்றுவருவதாக அந்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்மராட்சி வலய பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அறிந்த ஆசிரியர்கள் மாணவனை அழைத்து இவ்வாறு தவறு செய்யக் கூடாது என கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், அதிபர் தன்னை தாக்கியதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவன் முறைபாடு செய்துள்ளார். அத்துடன் அந்த மாணவன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததினாலேயே அந்த பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக மாணவன் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மாணவனை எந்தவொரு ஆசிரியரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.