பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் -அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்!

பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலையின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியையும் அவர் மீட்டிருந்தார்.

அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

அவற்றை தவறவிட்டவரை அடையாளம் கண்டு பருத்தித்துறை சாலைக்கு நேற்றையதினம் அழைத்து அவரிடம் பணம் மற்றும் அலைபேசியை பாலமயூரன் ஒப்படைத்தார்.

அவரது இந்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor