யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சிங்கள மொழியைச் சேர்ந்த மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர் 28-11-2012 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து 29-11-2012 அன்று பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கலகா சந்தியில் மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது அதில் அனைத்து மாணவர்களும் சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.
- Sunday
- September 15th, 2024