பேடன் பவல் சிலையை புனரமைக்க ஆளுநர் நிதியுதவி

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலையை புனரமைக்க வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ் பரி.யோவான் கல்லூரின் சாரணிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய ரூபா 1.5 இலட்சம் பெறுமதியான காசோலை யாழ் பரி.யோவான் கல்லூரி சாரணிய தலைவரிடம் ஆளுநரினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த இரண்டாம் திகதி அன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயரட்சுமி ரமேஸ் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் யாழ் மாவட்ட சாரணிய ஆணையாளர் திரு.எஸ்.செபஸ்தியாம்பிள்ளை, யாழ் பரி.யோவான் கல்லூரி உப அதிபர் மற்றும் சாரணர் அமைப்பின் பொறுப்பாசிரியர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

scout