Ad Widget

பேடன் பவலின் சிலை புனரமைக்கப்பட்டு, திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள சாரணியத்தின் நிறுவுனர் பேடன் பவலின் சிலை புனரமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியினால் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

யாழ் பரி.யோவான் கல்லூரியின் சாரணிய அமைப்பினால் இச்சிலையும் அதன் சுற்றுப்புறங்களும் புனரமைக்கப்பட்டது யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய என்.ஜே.ஞானப்பொன்ராஜா தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் பரி.யோவான் கல்லூரின் சாரணிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய ரூபா 1.5 இலட்சம் பெறுமதியான காசோலை யாழ் பரி.யோவான் கல்லூரி சாரணிய தலைவரிடம் ஆளுநரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

scout-badenpawal

யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயரட்சுமி ரமேஸ் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், யாழ் பரி.யோவான் கல்லூரியின் உப அதிபர் மற்றும் சாரண அமைப்பின் பொறுப்பாசிரியர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related Posts