பொது மக்களது பல முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை யாழ்.சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் மெஹமட் ஜெப்ரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொலிஸார் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்கும் போது உரிய நேரத்திற்கு வருகை தருவதில்லை போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர்.
இதன்போது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை ஒப்புக் கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளாது விடக்கூடாது என்றார்.
முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதற்காக யாரும் சேர்ந்து போகாமல் முறைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் கோரினார்.