பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Sl_police_flagபெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் வேண்டுகோளுக்கு இணங்க வட மாகாணத்தில் 100 பெண் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்குமான விண்ணப்பங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts