பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

Theft_Plane_Sympol-robberyயாழ்ப்பாணம் குருசோ வீதியில் பெண்ணின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு தனது சிறிய மகனுடன் சென்றுகொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடனால் அபகரிக்கப்பட்ட தங்க நகைகள் ஏழே முக்கால் பவுண் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணினால் யாழ் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.