பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் முறைப்பாடுகள்! – யாழ்.அரச அதிபர்

பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் தினமும் 3 அல்லது 4 முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்திற்கு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள், மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பலர் நேரில் சென்று முறையிட தயக்கம் மற்றும் அச்சம் போன்ற பல காரணங்களினால், குறித்த சம்பவங்கள் வெளிவராமல் போவதால் மாவட்டச் செயலகத்தின் விசேட இலக்கத்திற்கும் முறையிட கடந்த மாதம் ஏற்பாடுகள் செய்திருந்தோம்.

இதன் பிரகாரம் நாள் ஒன்றிற்கு 3 அல்லது 4 முறைப்பாடுகள் வீதம் தற்போது வரையில் 40ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் விசேட கவணம் செலுத்தப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய திணைக்களங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனால் இது தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் தெரிவிக்க முடியும் என்றார்.

Related Posts