யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலான மாநாடு ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கைப் பணியகத்தினால் வடமாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் பால் நிலை சமத்துவம், வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று தலைப்புக்களின் கீழ் விடயங்களின் கிழ் கலந்துரையாடப்பட்டது.
இதில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக பால் நிலை மற்றும் பெண்கள் உரிமம் ஆலோசகர் காயத்திரி, வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பு தொடர்பாக யாழ். பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் ம.கோசலை, பெண்கள் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.அருச்சுதன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இதன் போது இலங்கைப் பெண்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆர்.ஏ.சுலானந்த மற்றும் உதவிப் பணிப்பாளர் குமாரி கொஸ்தா கொட, யாழ் மாவட்டச் செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இக்கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் சிறுவர் சார்ந்த உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.