பூச்சாடிகளையும் விட்டுவைக்காத திருடர்கள்

சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சில, நேற்று வியாழக்கிழமை (14) அதிகாலையில் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர்.

மேற்படி பூச்சாடிகளை சுன்னாகம் பகுதி இராணுவத்தினர், சுன்னாகம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை (13) இரவு வைத்தனர்.

இவ்வாறு வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சிலவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.