புலிகள் புதைத்துவைத்திருந்த குண்டுகள் மீட்பு

வன்னி விமானப்படைத்தளத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, வவுனியா பாலம்பிட்டி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒருதொகை குண்டுகளை, அப்பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

அப்பகுதியில், புலிகளின் பதுங்குழிகள் இருந்த இடத்திலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டன என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.

74 மிதிவெடிகள், 6 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் மூன்று உள்ளிட்ட குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

Related Posts