புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ளேன் – முதலமைச்சர்

vickneswaranவடபுல அபிவிருத்திக்கென புலம்பெயர் தமிழர்களிடமிருந்தான நிதியுதவிகளைப்
பெற்றுக் கொள்ளும் பொருட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடுகையில் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுடன் தான் நடத்தியிருந்த நேரடிப் பேச்சுவார்த்தையின் போது ஜயசுந்தரவைத் தொடர்புகொண்டு இத்தகைய நிதியளிப்பை பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்றை வகுக்குமாறு அவர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

பி.பி. ஜயசுந்தரவை உரிய காலத்தில் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இத்தகைய உதவியை பிரச்சினைகள் ஏதுமின்றி தங்களால் பெற்றுக் கொள்ள முடியுமென ஜனாதிபதி மிகவும் இணங்கிப்போகும் தன்மையுடன் தெரிவித்திருந்ததை தான் சொல்லியே ஆக வேண்டுமெனவும் ஜயசுந்தரவுடன் இது குறித்து இணைந்து செயற்பட தாங்கள் ஆவலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்க்ஷவுடன் அவரது அண்மைக்கால சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில் வட மாகாண சபையின் நாளாந்த செயற்பாடுகளில் ஜனாதிபதி தனக்கு உதவக் கூடுமென தெரிவித்தார்.

எது எப்படியிருந்த போதிலும் தமிழ்ச் சமூகத்தினரைப் பொறுத்த வரையில் தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றையே அவர்கள் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.