புலனாய்வு பிரிவுக்கு வருமாறு றெமிறிடியாஸிற்கு அறிவிப்பு

Mureyappuஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முடியப்பு றெமிறிடியாஸினை பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி முடியப்பு றெமிறிடியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சட்டத்தரணி முடியப்பு றெமிறிடியாஸிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.