புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் முகமாகவும் அகில இலங்கை ரீதியில் கைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படுகிறது.
கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த இந்தப் பேரணி நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நோக்கி விழிப்புணர்வு பயணம் ஆரம்பித்துள்ளது என்றும் – 15 நள்களில் 1400 கிலோமீற்றரை சுற்றிவரும் இந்தப் பேரணி எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவுறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிள் பவனி கொழும்பில் ஆரம்பித்து புத்தளம், அனுராதபுரம், மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புல்மோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், புத்தல, கதிர்காமம், ஹம்பாந்தோட்ட, மாத்தறை, காலி வழியாக மீண்டும் கொழும்பை அடையவுள்ளது. இந்த விழிப்புணர்வு பவனியில் யுஜின் செல்வின், டனுஸ்க பெரேரா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.