புத்தகக் கண்காட்சியிலும் சர்ச்சை!

booksயாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, இதனிடையே, இது குறித்து தமிழ் தேசிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் இந்த முடிவு கைவிடப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இந்த அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷண்முகம் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் கிரின் க்ளாசிக் எக்ஸ்போட்டர்ஸ் என்ற நிறுவனம், யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள ஒரு புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், இதைப் பற்றி பரிசீலித்து முடிவு செய்ய, தங்களது அமைப்பு ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில், அந்த கண்காட்சியில் கலந்துகொள்வது என்பது தற்போதைய சூழலில் இலங்கை அரசுக்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒப்பாகும் என்று சீமான் போன்ற சிலர் அறிக்கை விடுத்திருந்தனர். வேறு பலரும் தம்மிடம் தொலைபேசியில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தமிழக முதல்வர் ஜெயல்லிதாகூட மீனவர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்று கூறிய ஷண்முகம், இதன் பின்னணியில், இந்தப் புத்தக்க் கண்காட்சியில் கலந்த்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது என்றார்.

இந்த முடிவால் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குத்தான் இழப்பு என்று கூறிய அவர், தற்போது இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் கொழும்பிலிருந்து தமிழ்ப் புத்தகங்களை வருவித்துப் படிக்கிறார்கள்.

இந்தப் புத்தகங்கள் சரிவர அவர்கள் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. மேலும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு ஏற்றுமதி நிறுவனம் மூலமே புத்தகங்கள் அங்கு விற்கப்படுகின்றன என்றார்.