புதுக்குடியிருப்பில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் செயலகத்திற்கு முன்னாள் அமைதியான முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணி பிணக்குகளிற்கு தீர்வை தருமாறு கோரியும், மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளின் அபிவிருத்திக்குழு கூட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஒன்றுகூடிய பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor