புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்

attack-attackவடமாகாண சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சேனாதிராஜா கிருஸ்ணகுமாரிற்கே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை இரவு சென்ற சிலர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின்போது அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் கூறினார்.