ஜே.வி.பி. மீது அதிருப்தி கொண்டுள்ள தாம் தன்னைப் போன்ற அதிருப்தியாளர்களை இணைத்துப் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை ஊடகவிலாளர்களை சந்தித்த சோமவன்ச தாம் கட்சியிலிருந்து விலகுகிறார் எனத் தெரிவித்த போதே புதிய கட்சி குறித்தும் கருத்து வெளியிட்டார்.
ஜே.வி.பியின் தற்போதைய கொள்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அது நாட்டின் நிலைமைக்கு ஏற்றாற்போல் இல்லை என்றும் கூறிய அவர் இதனாலேயே தாம் கட்சியிலிருந்து விலகுகிறார் என்றும் சொன்னார்.
சோமவன்ச 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார். பின்னர் கட்சியின் சர்வதேச தொடர்பாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.