தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் உறவு சிறப்பாக உள்ளதாகவும் தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்கவேண்டுமெனவும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போகின்றார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், புதிய கட்சியானது கடும்போக்குக் கொள்கையுடனே இயங்கும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் விக்னேஸ்வரனைச் சமாளிக்கமுடியாது எனவும் ஆகையால் தமிழத் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரனுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஊடகமொன்று விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியபோது,
இது ஒரு முட்டாள்தனமான செயலெனத் தெரிவித்த முதலமைச்சர், தான் சம்பந்தனை ஒரு கிழமைக்கு முதல் சந்தித்ததாகவும் தமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.