புதிய கடற்கரை வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு

road-openயாழ்ப்பாணம் குருநகர் வடக்கு புதிய கடற்கரை வீதி 23 ஆண்டுகளின் பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று திறந்து வைத்தார்.

‘றெக்கமளேன் வீதி’ என அழைக்கப்பட்ட இவ்வீதி கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் மக்கள் பாவனைக்கு விடப்படாமல் காணப்பட்டது..

இந்நிலையில் குறித்த வீதியை தமது பாவனைக்கு திறந்து விடுமாறு அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக குறித்த வீதி மக்கள் பாவனைக்கு திறுந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவ்வீதியூடாக மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில்
வீதியிலுள்ள தடைகளை அகற்றுமாறு அமைச்சர் படைத்தரப்பினரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், குறித்த வீதியூடாகச் செல்லும் கடற்கரை வீதியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு மின்கம்பங்களை நிறுவி மின்விளக்குகளை பொருத்துவதற்கும், குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கும் விரைவான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு துறைசார்ந்தோருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.