புதிய இராணுத்தளபதி நியமிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அவ்வாறான உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.